தீராக் காதல் - 13
“வெல்கம் மேடம்..” என மிகவும் மரியாதையுடனும் இன்முகத்துடனும் வரவேற்ற கடை ஊழியர்,
“என்ன மேடம் பார்க்கிறீங்க?” என்று கேட்க,
“லவ் பேர்ட்ஸ் வேணும்” என்றாள் அபி.
“வாங்க மேடம்..” என்றழைத்துச் சென்று காட்ட, அவள் ஒவ்வொன்றையும் ரசித்துப் பார்த்தாள். அதில் ஒன்றை வாங்கிக் கொண்டு வெளியே வந்தவள் அதிர்ச்சியும் திகைப்புமாகக் அப்படியே நின்று விட்டாள்.
அவளைக் கடந்து சென்ற ஒரு காரில் அவளது கணவனான ருத்ரா எங்கோ சென்று கொண்டிருக்க, அவளும் தனது காரை எடுத்துக் கொண்டு பின்தொடர்ந்து சென்றாள். அந்த கார் நேரே ஒரு ஷாப்பிங் மாலிற்குச் செல்ல, அபி தனது காரை சற்று தள்ளி நிறுத்தி விட்டு இறங்கி வந்தாள்.
மாலுக்குள் நுழைந்த அபி சுற்றும் முற்றும் கணவனைத் தேட, அவன் லிப்டில் ஏறி நான்காவது தளத்தை அடைவதைக் கண்டு அவளும் மற்றொரு லிப்டில் ஏறினாள். நான்காவது தளத்தை அடைந்தவள் கணவனைத் தேடிக் கொண்டே நடந்து வர, அவன் ஒரு கடையில் இருப்பதைக் கண்டு அப்படியே நின்று விட்டாள்.
மறைவாக நின்று கொண்டு தனது அலைபேசியை எடுத்தவள் கணவனுக்கு அழைக்க, மனைவியின் எண்ணைப் பார்த்து விட்டு தனியே வந்து நின்று அழைப்பை ஏற்றவன் “சொல்லுங்க மேடம்.. என்ன இந்த நேரத்துல எனக்கு கால் பண்ணி இருக்கீங்க? என் ஞாபகம் வந்திடுச்சா?” என்று மோகம் இழைந்தோடியக் குரலில் கேட்டான்.
அவனது பேச்சில் கீழ் உதட்டைக் கடித்து உணர்வுகளைக் கட்டுக்குள் கொண்டு வந்தவள், “எ..ங்க இருக்கீங்க?” என்று வினவ,
“எதுக்கு கேட்குற?” என்று கேட்டான்.
அபி மௌனமாக இருக்க, “ஹே என்ன அமைதியா இருக்க? கோபமா? நான் ஒரு முக்கியமான கிளைண்ட்டோட பிஸினஸ் பேச ஷாப்பிங் மாலுக்கு வந்து இருக்கேன்” என்றான்.
“ஓ..” என்றவளின் குரல் ஒரு மாதிரி ஒலிக்க,
“ரொம்ப வருஷம் கழிச்சி இவங்க இப்போ தான் இந்தியாவுக்கே வந்து இருக்காங்களாம். எங்க எம்.டி.யோட நெருங்கிய உறவு. கொஞ்சம் ஷாப்பிங் பண்ணனும். கூட வான்னு கூப்பிட்டாங்க.. நானும் மேனேஜரும் வந்து இருக்கோம்” என்று அவன் சொல்லிக் கொண்டு இருக்கும் போதே அந்த கிளைண்ட் அவனைப் பார்த்து வருமாறு கை அசைக்க,
“கிளைண்ட் கூப்பிடுறாங்க.. அப்புறம் பேசுறேன்” என்றவன் அழைப்பைத் துண்டித்து விட்டுச் சென்றான்.
தூரமாக நின்று அதனைப் பார்த்துக் கொண்டிருந்த அபியின் கண்களின் கண்ணீர் துளிர்க்க, சில நொடிகள் மட்டும் அங்கேயே நின்று பார்த்து இருந்து விட்டு திரும்பிச் சென்று விட்டாள்.
வீட்டிற்கு வந்தவளின் முகத்தைப் பார்த்தே ஏதோ சரியில்லை என்று கணித்து கொண்ட அண்ணாமலை, “அபிம்மா.. என்னாச்சு.. ஏன் உன் முகம் ஒரு மாதிரி இருக்கு?” என்று கேட்டார்.
அவரை ஏறிட்டுப் பார்த்த அபி, “பா..பார்த்துட்டேன்ப்பா” என்றாள்.
அவருக்கோ ஒன்றும் புரியவில்லை. “என்ன பார்த்த? யாரைப் பார்த்த?” என்று புரியாமல் வினவ,
“நான் யாருக்காக இந்த யுனிஃபார்மை போட்டேனோ.. யாரை வாழ்க்கையில ஒரு தடவையாவது பார்த்திட மாட்டேனான்னு ஏங்கினேனோ.. அவங்களைப் பார்த்துட்டேன்” என்றாள்.
அவள் யாரைச் சொல்கிறாள் என்று உணர்ந்தவர் வாயடைத்துப் போய் மகளைப் பார்க்க, அவள் தன் போக்கில் பேசிக் கொண்டே போனாள்.
அண்ணாமலைக்கு அவள் பேசியது எதுவுமே காதில் விழவில்லை. அதையே அவள் வெகு நேரம் கழித்து உணர, “அப்பா.. அப்பா..” என்று அவரைப் பிடித்து உலுக்கவும் தான் அவர் சுயநினைவை அடைந்தார்.
“அ..அவங்.. அவங்க உன்னைப் பார்த்தாங்களா?” அண்ணாமலை பதைபதைக்கும் மனதுடன் வினவ,
‘இல்லை’ என்பது போல் உதட்டைப் பிதுக்கியபடி தலையை இடம் வலமாக அசைத்தவளின் கண்களில் மேலும் இரு சொட்டு கண்ணீர் வெளியேறியது.
அன்று மாலை ருத்ரா வேலை முடிந்து சீக்கிரமே வீட்டிற்கு வந்து விட்டான். அண்ணாமலை அவரது அறையில் இருக்க, ருத்ரா இரண்டிரண்டு படிகளாகத் தாவி ஏறி தனது அறைக்கு விரைந்தான்.
கதவைத் திறந்து கொண்டு அறைக்குள் நுழைந்தவன், அபி அங்கு இல்லை என்றதும் திரும்பிப் போக எத்தனித்தான்.
அப்போது அவனது காதில் “ருத்ரா.. ஐ லவ் யூ..” என்று ஒரு குரல் ஒலிக்க, அப்படியே நின்று திரும்பிப் பார்த்தான்.
ஜன்னல் ஓரத்தில் கூண்டிற்குள் இருந்த கிளிகள் தான் வாய் ஓயாமல் “ருத்ரா.. ஐ லவ் யூ..” என்று சொன்னதையே திரும்பத் திரும்பச் சொல்லிக் கொண்டே இருந்தன.
அபி கடையில் இந்த கிளிகளை வாங்கும் போதே அதற்கு இந்த வார்த்தைகளைச் சொல்லிக் கொடுத்து தான் எடுத்து வந்து இருந்தாள்.
ருத்ரா அந்த கிளிக்கூண்டை நெருங்கிச் செல்ல, அதுவும் இவனைப் பார்த்ததும் படபடத்துக் கொண்டே அபி சொல்லிக் கொடுத்த வார்த்தைகளைத் திரும்பத் திரும்பச் சொல்லிக் கொண்டே இருந்தது.
அதைக் கேட்டு அவனது இதழ்கள் புன்னகையில் விரிந்த அதே சமயம் அபி குளியலறையில் இருந்து வெளியே வந்தாள். அழுதழுது சிவந்த முகத்தைக் குளிர்ந்த நீரால் அடித்து கழுவிக் கொண்டு வந்து இருந்தவள் கணவனது முகத்தை நேருக்கு நேர் பார்க்க முடியாமல் தன் முகத்தை வேறு பக்கம் திருப்பிக் கொள்ள, அவன் அதை வெட்கம் என்று எடுத்துக் கொண்டான்.
அடி மேல் அடியெடுத்து வைத்து மனைவியை நெருங்கியவன் பின்னிருந்தவாறே அவளை மென்மையாக அணைத்துக் கொண்டு, “ஒருவழியா மேடமுக்கு என் மேல கரிசனம் வந்துருச்சு போல..” என்று மோகத்துடன் கேட்டுக் கொண்டே அவளின் கழுத்தினில் இதழ் பதிக்க, அவனது மனம் கஷ்டப்படக் கூடாது என்று நினைத்த அபி தன் உணர்வுகளை அவனுக்குக் காட்டாமல் மறைக்க அரும்பாடுப்பட்டாள்.
“வெளியே போலாமா?” என்று அவன் கேட்க,
“எங்க?” என்று வினவினாள் அபி.
“சர்பிரைஸ்..” என அவளின் நெற்றியோடு நெற்றியாக முட்டி விலகியவன்,
“சீக்கிரம் ரெடியாகு.. நம்ம இரண்டு பேர் மட்டும் வெளியே போறோம்” என்று விட்டு அறையில் இருந்து வெளியேறினான்.
சிறிது நேரம் கழித்து, மெரூன் சட்டையும் சந்தன நிற பேண்டும் அணிந்து போனிடெல் போட்டபடி தயாராகி வந்த மனைவியைக் கண்டு அவன் மானசீகமாக நெற்றியில் அறைந்து கொண்டான்.
அவன் முகம் வெளிப்படுத்திய பாவனையைக் கண்டு புருவம் சுருக்கிய அபி, “என்னாச்சு?” என்று வினவ,
“ஆசையா வெளியே போலாம்னு கூப்பிட்டா, இப்படி ஏதோ என்கவுண்டர் பண்ண போற மாதிரி டிரஸ் பண்ணிட்டு வந்தா எப்படி.. மனுஷனுக்கு மூடே போகுது..” என சலித்துக் கொண்டான்.
அதில் மென்னகை புரிந்த அபி, மீண்டும் அறைக்குள் சென்று கதவை அடைத்துக் கொண்டாள். மேலும் சில நிமிடங்கள் கழித்து கதவு திறக்கும் சத்தம் கேட்க, திரும்பி பார்த்த ருத்ரா கண் இமைக்க மறந்து போனான்.
அடர் நீல நிறப் புடவை அணிந்து தளர்வான பின்னல் இட்டு இருந்தவள் மிதமான ஒப்பனையுடன் அவன் முன்னே வந்து நின்று, ‘எப்படி?’ என்பது போல் புருவத்தை மட்டும் ஏற்றி இறக்க,
தலையை உலுக்கி தன்னிலை அடைந்தவன் “போலாம்” என்று விட்டு முன்னே நடந்தான்.
அபி தயாராகும் இடைவெளியில் அண்ணாமலையிடம் சென்ற ருத்ரா, மனைவியை வெளியே அழைத்து செல்லும் விஷயத்தைக் கூற, மகள் இருக்கும் மனநிலைக்கு அது கொஞ்சம் ஆறுதல் அளிக்கும் என்று நினைத்தவர் சரி என்று விட்டார்.
*********
அந்தி மாலை நேரம், வேகமெடுத்து வரும் கடலலைகள் நுரையுடன் கரையைத் தீண்டிச் சென்றது. அதுபோல் அலைபாய்ந்து கொண்டிருந்த அபியின் மனமும் கொஞ்சம் கொஞ்சமாக சமநிலையை அடைய, கடற்கரை மணலில் அமர்ந்து முட்டிக்காலில் முகம் சாய்த்து கடலலையை ரசித்துப் பார்த்தாள்.
“ஆர் யூ ஓகே?”
கணவனின் குரலைக் கேட்டு அவள் புருவம் சுருக்கியபடி அவனைத் திரும்பிப் பார்க்க, “இல்ல, வந்ததுல இருந்து ஒரு மாதிரியாவே இருக்கீங்களேன்னு கேட்டேன். பிடிக்கலன்னா இப்போ கூட வீட்டுக்குப் போயிடலாம்” என்றான்.
அதற்கு மெல்லியப் புன்னகையைச் சிந்தியவள் அவன் முழங்கையைப் பிடித்துக் கொண்டு அவனது தோளில் காதலுடன் தலை சாய்த்துக் கொள்ள, ருத்ராவின் இதழ்களும் புன்னகையில் விரிந்தன.
அப்படியே சில கணங்கள் கடக்க, மேற்கில் சூரியன் முற்றிலுமாக மறைந்து அவ்விடத்தில் மெல்ல இருள் சூழத் தொடங்கியது. அப்போது அவர்களிடம் வந்த ஒரு பெண்மணி, “அம்மா பூ வாங்கிக்கோங்கம்மா” என்றார்.
“வேணாம் போம்மா..” என்று அவள் சொல்ல,
“நீங்க பூ கொடுங்கம்மா” என்றான் ருத்ரா.
அவள் அவனைத் திரும்பிப் பார்க்க, “நம்ம கல்யாணத்தப்போ மட்டும் நீங்கப் புடவை கட்டி பூ வச்சே நான் பார்த்தேன். அதுக்கு அப்புறம் இன்னைக்கு தான் புடவை கட்டி இருக்கீங்க.. பூவும் வச்சிக்கோங்க. ரொம்ப அழகா இருப்பீங்க” என்றான் கண்களைச் சுருக்கி.
“எத்தனை முழம் தம்பி வேணும்?” என்று அந்த பூ விற்கும் பெண்மணி கேட்க, அவன் அவளைக் கேள்வியாகத் திரும்பிப் பார்த்தான்.
அவளோ திருதிருவென முழிக்க, பொங்கி வந்தச் சிரிப்பை அடக்கிக் கொண்டவன், “அதைக் கூட உங்க அப்பாவைத் தான் கேட்கணுமா?” என்று கேட்டான் மெல்லியக் குரலில்.
அவள் அசடு வழிய முகத்தை வேறு பக்கம் திருப்பிக் கொள்ள, “அக்கா நீங்களே பார்த்துக் கொடுங்க” என்றான்.
அந்தப் பெண்மணியும் சிரித்துக் கொண்டே இரண்டு முழம் மல்லிப்பூவை எடுத்து அபியின் தலையில் வைத்து விட, “எவ்ளோக்கா ஆச்சு?” என்று கேட்டான் ருத்ரா.
“120 ரூபாய் ஆச்சு தம்பி..” என்று அவர் சொல்ல, அவன் தன் பர்சில் இருந்து 500 ரூபாய் நோட்டை எடுத்துக் கொடுத்தான்.
“ஐநூறு ரூபாயா? சில்லறை இல்லையேப்பா..” என்று அவர் சொல்ல,
“சில்லறை வேணாம். நீங்களே வச்சிக்கோங்க” என்றான்.
அபி அவனைத் திரும்பிப் பார்க்க, அவன் ‘என்ன’ என்பது போல் அவளைப் போலவே புருவத்தை ஏற்றி இறக்கினான். அதில் அவளுக்கு வெட்கம் வந்து தொலைக்க, மீண்டும் அவன் கரத்தோடு கரம் கோர்த்துக் கொண்டு அவன் தோளில் தலை சாய்த்துக் கொண்டாள்.
இப்படியே விட்டால், வேலைக்காகாது என்று நினைத்தவன் மணலில் இருந்து எழுந்து கொள்ள, அபி அவனைத் திகைப்போடு பார்த்தாள். சட்டென அவளை அவன் கைகளில் ஏந்திக் கொள்ள, “ஐயோ! என்ன பண்றீங்க?” என்று அலறினாள்.
அது சிறிய கடற்கரை என்பதால் ஆள்நடமாட்டம் எல்லாம் சற்று குறைவாகத் தான் இருக்கும். அவன் அவளது அலறலைக் கண்டு கொள்ளாமல் தூக்கிச் சென்று கடலலைகள் கரை தீண்டும் இடத்தில் இறக்கி விட்டான்.
அவள் அவனைச் சிரிப்புடன் பார்க்க, அவளின் வெற்றிடையில் கை வைத்து அவளைத் தன்னோடு சேர்த்துக் கொண்டவன், “எவ்ளோ நேரம் தான் அங்கேயே உட்கார்ந்து கடலையே பார்த்துட்டு இருக்குறது? என்ஞாய் பண்ண வேணாமா?” என்று கேட்டான் குறும்பாய். அதில் அவளது முகம் செங்கொழுந்தாய் சிவந்துப் போக, ருத்ராவின் கண்கள் பளபளத்தன.
கடல் அலையில் நனைந்து விளையாடியதில் அவர்களுக்கு நேரம் போனதே தெரியவில்லை. அத்துடன் உடைகள் எல்லாம் ஈரமாகி விட, அருகில் இருந்த ஒரு ஹோட்டலுக்கு அவளை அழைத்துச் சென்றான்.
“ரூம் இருக்கா?” என்று அவன் மேனேஜரைப் பார்த்து வினவ,
“ரூம் எதுக்கு? வீடு பக்கத்துல தானே இருக்கு. வீட்டுக்கே போயிடலாமே..” என்றாள் அபி.
“ஆல்ரெடி ரொம்ப லேட் ஆயிடுச்சு. அங்கிளும் மாத்திரை எல்லாம் போட்டு தூங்கிட்டு இருப்பார். அவரை ஏன் டிஸ்டர்ப் பண்ணனும்.. நாம இன்னைக்கு நைட் இங்கேயே ஸ்டே பண்ணிட்டு காலையில கிளம்பிடலாம்” என்று சொல்ல, அவள் அமைதியாக இருந்து விட்டாள்.
ருத்ரா திரும்பி மேனேஜரைப் பார்க்க, “சிங்கிளா? டபுளா? சார்..” என்று கேட்டான்.
“சிங்கிள் தான்” என்றதும், ஒரு அறையின் சாவியை எடுத்துக் கொண்டு “வாங்க சார்..” என்று விட்டு முன்னே நடக்க, ருத்ராவும் அபியும் அவன் பின்னே நடந்தார்கள்.
அவர்களுக்காக அறையைத் திறந்து காட்டியவன், மற்ற விபரங்களையும் கூறி விட்டு “வேற ஏதாவது வேணுமா சார்?” என்று கேட்க,
மனைவியைத் திரும்பிப் பார்த்த ருத்ரா “சாப்பாடு வரச் சொல்லட்டுமா?” என்று கேட்டான்.
“இல்ல.. பீச்ல சாப்பிட்டதே வயிறு ஃபுல்லா இருக்கு..” என்று சொல்ல,
“சரி.. சாப்பாடு வேண்டாம். சூடா இரண்டு டம்பளர் பால் மட்டும் போதும்” என்றான்.
“ஓகே சார்.. சர்வீஸ் பாய்க்கிட்ட கொடுத்து அனுப்புறேன்” என்று கூறி விட்டு அவன் செல்ல, ருத்ரா கதவை அடைத்து விட்டு வந்து தொலைக்காட்சியை உயிர்ப்பித்தான்.
அபி அங்கிருந்த டவலை எடுத்துக் கொண்டு குளியலறைக்குச் செல்ல, ருத்ராவும் பின்னாடியே வந்து அவளை அணைத்துக் கொண்டு கழுத்தில் முகம் புதைத்தான். ஈர உடையில் குளிருக்கு நடுங்கிக் கொண்டு இருந்தவளுக்கு ஆடவனின் தீண்டலில் தேகம் சூடேறியது. அத்துடன் அவனது இதழ்கள் அவள் முகத்தில் ஊர்வலம் போக, அவளுக்கு நிற்கவே முடியவில்லை.
கால்கள் தளர்ந்து போய் அவன் மேலேயே அவள் சாய, அவளின் கன்னத்தைப் பற்றி நிமிர்த்தியவன் அவள் இதழ் நோக்கி குனிந்த சமயம் அறையின் காலிங்பெல் அடித்தது.
அதில் தன்னிலை அடைந்த அபி அவனின் முதுகைப் பிடித்து தள்ளிச் சென்று குளியலறையில் இருந்து வெளியே தள்ளி, “போங்க..” என்று விட்டு கதவை அடைத்து தாழ்பாள் போட்டு அதன் மீதே சாய்ந்து நின்று வெட்கத்தில் முகம் சிவந்தாள்.
ருத்ரா புன்னகையுடன் நடந்துச் சென்று கதவைத் திறக்க, “சார் பால்..” என்றபடி ஒருவன் நின்று இருந்தான். அதனை வாங்கி கொண்டு கதவை மீண்டும் தாழ்பாள் போட்டு விட்டு திரும்ப, அபி குளியலறையில் இருந்து வெளியே வந்தாள்.
மாற்றுத் துணி இல்லாததால் ஈரப் புடவையுடனே அவள் இருக்க, அதில் பட்டும் படாமல் தெரிந்த அவளது அங்க வளைவுகளைப் பார்வையால் ரசித்துக் கொண்டே மனைவியை நெருங்கியவன், வலது கையில் இருந்த கண்ணாடிக் குவளையை அவளிடம் நீட்டினான்.
அதை வாங்கிக் கொண்டவள் ஜன்னல் அருகே சென்று நின்று கொஞ்சம் கொஞ்சமாக பாலைப் பருக, அவளது மேனியைப் பார்வையால் அளந்தவன் ஒரே மடக்காகப் பாலைப் பருகி விட்டு கண்ணாடிக் குவளையை மேஜையில் நங்கென்று வைத்தான்.
அதில் திரும்பிப் பார்த்தவள் அவனது ஆளை விழுங்கும் பார்வையில் அதற்கு மேல் பாலைக் குடிக்க அவளுக்குத் தோன்றவில்லை. அவனையே இமைக்காமல் பார்த்தாள். மெல்ல அடியெடுத்து வைத்து அவன் அவளை நெருங்க, அவள் அசையாமல் நின்றாள்.
ஒரு கையால் அவளது கையில் இருந்த பால் கிளாஸை வாங்கி அருகில் வைத்தவன், மற்றொரு கையால் அவளின் கன்னத்தைப் பற்றி அவளது நெற்றியில் ஆழ்ந்த முத்தம் ஒன்று பதிக்க, பெண்ணவளின் விழிகள் மெல்ல மூடிக் கொண்டது. அப்படியே அவள் முகத்தில் ஊர்வலம் போன அவனது இதழ்கள் அவளது இதழில் வந்து இளைப்பாற, பெண்ணவளின் கைகள் தானாக மேலெழுந்து அவனது சட்டையின் காலரை இறுகப் பற்றிக் கொண்டன.
மென்மையாகத் தொடங்கிய இதழ் தீண்டல் இருவருக்குள்ளும் மோகத் தீயைப் பற்ற வைக்க, மின்விளக்கை அணைத்து விட்டு மஞ்சத்தில் தஞ்சம் அடைந்தார்கள். வெளியே இடியுடன் கூடிய மழை வெளுத்து வாங்க, இங்கே மனைவியின் இதழின் மென்மையில் கரைந்துப் போனான் ருத்ரா.
பெண்ணவளின் இதழ்களை விடுவிக்க மனமில்லாதவன் அப்படியே அவனுக்குத் தடையாக இருந்த இருவரின் உடைகளையும் அவசரம் அவசரமாக உருவி வீசி எறிந்து மோகம் கலந்த வன்மையுடன் அவளில் புதைந்தான்.
மீண்டும் மீண்டும் மனைவியை நாடிய ருத்ரா விடியற்காலையில் கண் அயர, நாணப் புன்னகையுடன் கணவனின் நெற்றியில் இதழ் பதித்த அபி அவனது நெஞ்சில் தலை சாய்த்து உறக்கத்தைத் தழுவினாள்.
Post a Comment